அதிபர் தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
தற்பொது கொழும்பில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க(Saman Sri Ratnayake) மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான திகதி
இதன்படி ஜூலை இறுதிக்குள் அதிபர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த திகதியை நடைமுறைப்படுத்துவதில் வேறு எந்த காரணமும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
எவரும் பரிசீலிக்க முடியும்
அரசியலமைப்பு மற்றும் அதிபரின் சட்டத்தின் பிரகாரம் இந்த தினங்களை எவரும் பரிசீலிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும்.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 4-6 வாரங்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.