எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவளிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் எஞ்சியிருக்கும் ஆளும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(prasanna ranatunga)) தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சி என்ற ரீதியில் அதிபருக்கு ஆதரவளிக்காது போனால் தனிப்பட்ட மட்டத்தில் அந்த தீர்மானத்தை எடுக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மிகச் சிலரே கருத்து
அதிபர் தேர்தலுக்கு தனி வேட்பாளரை கட்சி முன்வைக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட மிகச் சிலரே கருத்து தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பெரும்பான்மையானவர்கள் ஆதரவு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி உறுப்பினர்களின் பிரதிநிதிகளுடனான தற்போதைய கலந்துரையாடலில், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டும் என்று கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.