Home முக்கியச் செய்திகள் ஜனாதிபதி தேர்தல்: தமிழ் பொதுவேட்பாளருக்கு சங்கு சின்னம்

ஜனாதிபதி தேர்தல்: தமிழ் பொதுவேட்பாளருக்கு சங்கு சின்னம்

0

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா. அரியநேத்திரனின் (P. Ariyanethiran) வேட்புமனுப் பத்திரம் சற்று முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இதேவேளை தமிழ்ப் பொது வேட்பாளருக்குரிய சின்னமாக சங்கு சின்னத்தில் இவர் போட்டியிடவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (15) காலை 9 மணி முதல் 11 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

வேட்பு மனு

இன்று காலை தேர்தல் ஆணைக்குழுவில் தமிழ் பொது வேட்பாளர் வேட்பு மனுவை சமர்ப்பித்திருந்தார்.

அத்துடன் கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version