ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (sajith premadasa) இன்று (15) தனது வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
குறித்த நிகழ்விற்கு சஜித் பிரேமதாசவின் மனைவி மற்றும் மகள் வருகை தந்திருந்ததுடன், பொது நிகழ்வில் மகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது.
வேட்புமனு
இதற்கான நடவடிக்கைகள் இன்று (15) காலை 9.00 மணிக்கு ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
நேற்று (14) வரை கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் 39 பேர் இன்று வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 22 வேட்பாளர்களும் 17 சுயேச்சை வேட்பாளர்களும்இ மற்றொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.