Home இலங்கை சமூகம் சிறிலங்கா அதிபரின் புலமைப்பரிசில் திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைப்பு

சிறிலங்கா அதிபரின் புலமைப்பரிசில் திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைப்பு

0

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) எண்ணக்கருவிற்கு ஏற்ப முல்லைத்தீவில் (Mullaitivu) அதிபர் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று (18) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த  நிகழ்வில் பிரதம விருந்தினராக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும்
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான காதர் மஸ்தான் (K. Kader Masthan) கலந்து சிறப்பித்துள்ளார்.

புலமைப்பரிசில் திட்டம் 

இதன்போது, முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட 472 மாணவர்களுக்கு  புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த புலமைப்பரிசில் திட்டமானது முல்லைத்தீவு கல்வி
வலயத்திற்குட்பட்ட 472 மாணவர்களுக்கும் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட 450
மாணவர்களுக்கும் மொத்தமாக 922 மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) , வடக்கு மாகாண
ஆளுநரின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம், காணி), பிரதேச செயலாளர்கள், மாகாண கல்விப்பணிப்பாளர்,அதிபர்கள், ஆசிரியர்கள், எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version