Home இலங்கை அரசியல் பொது வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் விஜயதாஸ விரைவில் முடிவு

பொது வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் விஜயதாஸ விரைவில் முடிவு

0

இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக என்னைக்
களமிறங்குமாறு முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பில் இன்னும் ஓரிரு
வாரங்களுக்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ
ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மஹியங்கனையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

ஜனாதிபதித் தேர்தல்

அவர் மேலும் கூறியதாவது,

“ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குமாறு பல தரப்பினரும் என்னிடம் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், அதேபோல் மகா சங்கத்தினர் மற்றும்
ஏனைய மதத்தலைவர்கள் ஆகியோரும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சிந்தித்து, நன்கு ஆராய்ந்து அடுத்த சில வாரங்களில்
தீர்மானமொன்றை எடுக்கவுள்ளேன்.

எமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, கட்சியைப் பார்த்து வாக்களிப்பதைவிட, நபர்கள் மற்றும் கொள்கைகளுக்கு
முன்னுரிமையளித்தே இனி வாக்களிப்பார்கள்“ என குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் சஜித்தின் பக்கமே: டிலான் உறுதி

அநுரவின் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version