மரக்கறிகளின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளதாக வர்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விலை நிலவரம்
இதனடிப்படையில், மெனிங் சந்தையில் ஒரு கிலோ கிராம் கரட் 250 ரூபாவிற்கும் , போஞ்சி ஒரு கிலோ கிராம் 250 ரூபாவிற்கும், பூசணி ஒரு கிலோ கிராம் 300 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லீக்ஸ் 200 ரூபாவிற்கும், தக்காளி மற்றும் கோவா ஒரு கிலோ கிராம் 150 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறி பயிர்ச்செய்கை பாதிக்கப்படுவதாகவும் இதனால் கடந்த நாட்களை விட இந்த நாட்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.