Home இலங்கை அரசியல் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

0

குடும்பம், சமூகம் மற்றும் உலகம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்குதல் மற்றும் ஐக்கியத்துடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நத்தார் பண்டிகை நினைவூட்டுவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தமது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (25.12.2024) வெளியிடப்பட்டுள்ள நத்தார் தின வாழ்த்து செய்தியிலேயே மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

மறுமலர்ச்சி 

ஒரு தேசமாக மீளக் கட்டியெழுப்பும் இந்த மறுமலர்ச்சி யுகத்தில் தமது குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் காலத்தைச் செலவிடுவது மிகவும் முக்கியமானதாகும்.

உலகம் முழுவதும் காணப்படும் யுத்த சூழல் காரணமாகச் சிறுவர்களும் மரணிக்கும் துர்பாக்கிய நிலைக்கு மத்தியில் நாம் நமது உள்ளங்களில் அமைதியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

பரஸ்பர உறவுகளைக் கட்டியெழுப்பவும், பொறுமையை வளர்த்துக் கொள்ளவும், ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் அனைவரும் கடமைப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version