Home உலகம் ரஷ்யா நோக்கி சென்ற விமானம் விழுந்து நொருங்கியது : பலர் இறந்திருக்கலாம் என அச்சம்

ரஷ்யா நோக்கி சென்ற விமானம் விழுந்து நொருங்கியது : பலர் இறந்திருக்கலாம் என அச்சம்

0

அஜர்பைஜானின்(Azerbaijan) பாகுவில் இருந்து ரஷ்யாவுக்கு(russia) 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கஜகஸ்தானில்(Kazakhstan) அக்டாவ் பகுதியில் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு பலமுறை வானில் வட்டம் அடித்தது. விமானி நீண்ட நேரம் முயற்சி செய்தும் விபத்தை தவிர்க்க முடியவில்லை.

தீப்பற்றி எரியும் காணொளி காட்சிகள்

பயணிகள், விமான சிப்பந்திகள் என மொத்தம் 72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து தீப்பற்றி எரியும் காணொளி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விபத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம்

விபத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  

NO COMMENTS

Exit mobile version