அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை டிசம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தௌத்கம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி, அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஒரு கிலோகிராமுக்கு மேல் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
புதைக்கப்பட்டிருந்த ஹெரோயின் மீட்பு
எப்பாவல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குப் பின்னால் புதைக்கப்பட்டிருந்த அதிபருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 1 கிலோகிராம் 185 கிராம் ஹெரோயின், கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிகமாக, அதிபர் போதைப்பொருட்களை அளவிடப் பயன்படுத்தப்படும் மின்னணு தராசு மற்றும் பொலிதீன் சீலர் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
