Home இலங்கை அரசியல் முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களுக்கு குறி வைக்கும் நிறுவனங்கள்

முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களுக்கு குறி வைக்கும் நிறுவனங்கள்

0

அமைச்சர்களின் இல்லங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்ள பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான கோரிக்கைகளை பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களின் இல்லங்களுக்கு மேலதிகமாக பல அரச நிறுவனங்கள் மற்றும் நீதிபதிகளின் இல்லங்கள் என்பனவற்றுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி இல்லங்ககள்

இந்நிலையில் அமைச்சர்களுக்கான இல்லங்கள் மற்றும் ஜனாதிபதி இல்லங்ககள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குழுவினால் வழங்கப்படும் அறிக்கைக்கு அமைய இறுதி முடிவு எட்டப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சில அமைச்சர் இல்லங்கள் பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

நிதிப் பிரச்சினை

நிதிப் பிரச்சினை இருப்பதனால் இவற்றை சீர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு , கண்டி, நுவரெலியா, அனுராதபுரம், கதிர்காமம், யாழ்ப்பாணம், எம்பிலிப்பிட்டி, பெந்தொட்டை மற்றும் மகியங்கனை பகுதிகளில் ஜனாதிபதி இல்லங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version