இலங்கையில் எந்த ஹோட்டலும் அல்லது தனிநபரும் கடற்கரைகளின் உரிமையை கோர முடியாது என்று கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் தலைமை பணிப்பாளர் டர்னி பிரதீப் குமார, ஓட்டல்கள் மற்றும் சொத்துகளுக்கு தங்கள் கடற்கரைப் பகுதிகளை பராமரிக்கும் பொறுப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
தடை செய்ய முடியாது
எனினும், அவர்கள் அந்தப் பகுதிகளை பராமரிப்பதால், அதை தனியார் கடற்கரையாகக் கூறி, உள்ளூர் மக்கள் அல்லது பிறர் அந்த இடத்தைப் பயன்படுத்துவதற்கு தடையிட முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
“பாதுகாப்பு அமைச்சு அல்லது வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட பகுதி அல்லாதவரை, யாரும் அந்தக் கடற்கரை பகுதிக்கு செல்லலாம்.
எந்த தனிநபருக்கும் அல்லது சொத்துக்கும் அதைத் தங்களுடையது என்று உரிமை கோர முடியாது” என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
