Home இலங்கை அரசியல் அநுரவுக்கு சாதகமாகிய சிலிண்டர் – தொலைபேசி பிரிவினை!

அநுரவுக்கு சாதகமாகிய சிலிண்டர் – தொலைபேசி பிரிவினை!

0

கேஸ் சிலிண்டருக்கும் தொலைபேசிக்கும் இடையே ஏற்பட்ட பிரிவினையின் விளைவினாலே தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்திக்குள் தற்போது நுழைந்துள்ள சிலர் சந்தர்ப்பவாதிகள் எனவும் அவர்களிடமிருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியள்ளார்.

இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இணையாமல் தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமது தரப்புக்கு அது சவாலாகும் என்றும் கூறியள்ளார்.

பொருளாதார நெருக்கடி

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த ஆண்டு மக்களுக்கு இன்னல்கள் இல்லாத ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.

இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் எப்படி விடை தேடுகிறது என்று புரியவில்லை.

அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வரம்பற்ற ஆணையை பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது.

ஊடக நிகழ்ச்சி

ஜனாதிபதியும். அரசாங்கமும் ஊடக நிகழ்ச்சியை நடத்த முயற்சிக்கின்றனர்.  சில அமைச்சர்கள் ஊடகங்களை தவிர்க்கின்றனர்.

வரலாற்றைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. ஜனாதிபதியின் சீன விஜயம் குறித்து பேசப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் வெவ்வேறு பாதையில் சென்றால், அடுத்த தேர்தல்களில் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக அமையும்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version