டொலர் பெறுமதியின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கட்டுப்பாட்டு விலையை சிறிது காலத்திற்கு நீக்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூர் விவசாயிகள்
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளமையால் நுகர்வோர் அதிக விலை கொடுத்து அரிசியை வாங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியானது உள்ளூர் விவசாயிகளை கருத்தில் கொள்ளவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சந்தையில் அரிசி கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து கவலையடைவதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.