Home உலகம் கடலில் தத்தளிக்கும் ரஷ்ய ஆயுத கப்பல்

கடலில் தத்தளிக்கும் ரஷ்ய ஆயுத கப்பல்

0

சிரியாவில்(syria) பசார் அல் ஆசாத் ஆட்சி கவிழ்ந்த நிலையில் அங்கு முகாமிட்டிருந்த ரஷ்ய(russia) படையினர் தமது ஆயுதங்கள் உட்பட உடமைகளுடன் வெளியேறி வருகின்றனர்.

இவ்வாறு அங்கிருந்த ஆயுதங்களை ஏற்றிச் சென்ற ரஷ்ய கப்பல் ஒன்று
போர்த்துக்கல் நடுக்கடலில் பழுதடைந்து நிற்கின்றது.

ஸ்பார்டா (Sparta) என அழைக்கப்படும் இந்தகப்பல், பழுதடைந்து நிற்கும் நிலையில் ஆழ்கடலில் அடித்து செல்கின்ற நிலையில் உள்ளது.

எரிபொருள் குழாயில் ஏற்பட்ட பெரிய கோளாறு

கப்பலின் எரிபொருள் குழாயில் ஏற்பட்ட பெரிய கோளாறு அதன் இயக்கத்தை முற்றிலும் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அக்கப்பல் குழுவினர் அதை சரிசெய்ய முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சிரியாவின் டார்டஸில் முன்னர் நிறுத்தப்பட்ட ரஷ்யாவின் இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் கடல் வழியாக லிபியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version