Home இலங்கை கல்வி தேசிய கல்வி பேரவையை அமைப்பதற்கான திட்டம் விரைவில்…

தேசிய கல்வி பேரவையை அமைப்பதற்கான திட்டம் விரைவில்…

0

தேசிய கல்வி பேரவையை அமைப்பதற்கான திட்டம் விரைவில் அமைச்சரவையில்
சமர்ப்பிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

கல்வி சீர்திருத்தங்களை ஆராய்வதற்கான நாடாளுமன்ற துணைக் குழுவின் தலைவரான
பிரதி அமைச்சர் ஜெயசிங்க, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசனை சேவை வழங்குநர்கள், கல்வி
நிர்வாக அதிகாரிகள் மற்றும் தொழில் பயிற்சித் துறையில் உள்ளவர்கள்
எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதே புதிய பேரவையின் பணியாக இருக்கும்
என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/proposal-national-education-council-will-soon-1760199478

NO COMMENTS

Exit mobile version