Home இலங்கை அரசியல் காஷ்மீர் தாக்குதலுக்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டத்தில் காவல்துறையின் அடக்குமுறை

காஷ்மீர் தாக்குதலுக்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டத்தில் காவல்துறையின் அடக்குமுறை

0

கடந்த 22 ஆம் திகதி ஜம்மு – காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹால்காம் (Pahalgam) பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியிருந்தனர்.

இந்த சம்வத்தில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்ட நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதல் உலகளவில் பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்தது.

இது கண்டிக்கத்தக்க விடயம் என கூறி சர்வதேச அரங்கில் பாரிய எதிர்ப்பு பாகிஸ்தானுக்கு (Pakistan) எதிராக கிளம்பி இருந்த நிலையில், தற்போது இது இந்தியா (India) மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் அச்சுறுத்தலுக்கு வழிவகுத்துள்ளது.

இந்தநிலையில், தற்போது இலங்கையில் (Sri Lanka) காஷ்மீர் தாக்குதலுக்கு எதிராக கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று (30) எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி (Chidambaram Karunanidhi) தலைமையில் கொழும்பில் (Colombo) இடம்பெற்றுள்ளது.

இதில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டதை ஏற்றுகொள்ள முடியாது எனவும், தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிலுள்ள தீவிரவாதம், மற்றும் குறித்த தாக்குதல், உலகலாளாவிய ரீதியில் தீவிரவாதம் என்பவை தொடர்பில் பலதரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.youtube.com/embed/5jpRVk1AbtY?start=246

NO COMMENTS

Exit mobile version