Home சினிமா ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன்.. எமோஷனலாக பேசிய நடிகர் சூரி..

ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன்.. எமோஷனலாக பேசிய நடிகர் சூரி..

0

சூரி

நகைச்சுவை நடிகராக பிரபலமாகி, இன்று கதாநாயகனாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் சூரி. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் மாமன்.

எமோஷனல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் விலங்கு என்கிற சூப்பர்ஹிட் வெப் சீரிஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

அஜித் அதை செய்யவில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கை இல்லை.. ஓபனாக பேசிய ராகவா லாரன்ஸ்

மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாலசரவணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். வருகிற 16ம் தேதி இப்படம் திரையரங்கில் ரிலீஸாகிறது.

எமோஷனலாக பேசிய நடிகர் சூரி

இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் படக்குழு கலந்துகொண்டனர். இதில் சூரி எமோஷனலாக பேசியது படுவைரலாகி வருகிறது.

“நான் எட்டாவது படிக்கும்போது எல்லாத்தையும் விட்டுட்டு திருப்பூருக்கு வேலைக்காக வந்துட்டேன். அப்போ ஒரு நாளைக்கு 20 ரூபாய் சம்பளம். ஏழு நாளுக்கு 140 ரூபாய் வரும். அதில் 70 செலவு பண்ணிட்டு, மீதி 70 ஊருக்கு அனுப்புவேன். அப்போ திருப்பூரில் ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன். இன்று அதே திருப்பூரில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது பெருமையாக உள்ளது” என பேசியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version