Home இலங்கை சமூகம் யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டம்

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டம்

0

யாழில் (Jaffna) ஊடகவியலாளர் ஒருவரின்  வீட்டின் மீது தாக்குதல் நடத்தி வாகனங்களுக்குத் தீ
மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதி கோரி
யாழ். நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, இன்று (19.06.2024) யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அச்சுவேலி, பத்தமேனி காளி கோயில் பகுதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு
மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேரை கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல்
நடத்தியது.

தாக்குதல் சம்பவம் 

இதன்போது, வீட்டுக்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட
வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்தும்
கொளுத்தப்பட்டன.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், நீதியான விசாரணைகளை முன்னெடுத்து
குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரியுமே இந்த போராட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தாக்குதல் சம்பவம் தொடர்பில், அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும்
கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த மூவரை அச்சுவேலி பொலிஸார் நேற்று (18) கைது
செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/protest-for-theepan-s-house-burnt-case-jaffna-1718797088

NO COMMENTS

Exit mobile version