முல்லைத்தீவில் (Mullaitivu) வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை உடனடியாக வழங்க உரிய திணைக்கள
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட
ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலேயே இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
பாதிப்பு நிலைமைகள் குறித்து மதிப்பீடு
விவசாய பாதிப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கு குறிப்பிட்டளவு நாட்கள் தேவை
என திணைக்கள அதிகாரிகள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆனால் கூடிய விரைவில் விவசாய பாதிப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்து,
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை உடனடியாக வழங்க உரிய திணைக்கள
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முல்லைத்தீவில் 23,930 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளநீரில்
மூழ்கியுள்ளதோடு, வயல் நிலங்களில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கியிருக்கின்றதா என்பதை
அவதானித்தே, பாதிப்பு நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்ய முடியும் மாவட்ட கமநல அபிவிருத்தித்
திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.பரணீகரன் குறிப்பிட்டுள்ளார்.