Home இலங்கை பொருளாதாரம் வாகன இறக்குமதியால் அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

வாகன இறக்குமதியால் அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

0

இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்து வருவதால், வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் வருவாயை ஈட்டுவதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சங்கத்தின் செயலாளர் அரோஷா ரொட்ரிகோ இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்தது.

ஏற்றுமதி

எனினும் ஏற்றுமதி ஆய்வுச் சான்றிதழில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிக்க முடியவில்லை.

அதன்படி, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்தத் தடைகளை நீக்கி ஒரு வர்த்தமானியை வெளியிட்டார்.

எனும், துறைமுக அனுமதி தாமதம் உள்ளிட்ட பல சிக்கல்கள் காரணமாக, எதிர்காலத்தில் நுகர்வோர் அதிக விலைக்கு வாகனங்களை வாங்க வேண்டியிருக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அரோஷா ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version