Home இலங்கை அரசியல் மன்னாரில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பொதுக்கூட்டம் !

மன்னாரில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பொதுக்கூட்டம் !

0

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரித்து மாபெரும்
பொதுக்கூட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கூட்டமானது நாளை (13) மாலை மூன்று மணிக்கு மன்னார் (Mannar) நகர
பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், மேற்படி கூட்டமானது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் (Selvam Adaikalanathan) ஏற்பாட்டில் முன்னாள் பிரதேச
சபை உறுப்பினர் மோகன்ராஜ் (Mohanraj) ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது.

பொதுக் கட்டமைப்பு

இதனடிப்படையில், பொதுக் கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் அரசியல்
கட்சித் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு
உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பொதுக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய பொது
கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/public-meeting-for-tamil-general-candidate-mannar-1726134496

NO COMMENTS

Exit mobile version