Home இலங்கை அரசியல் ரணிலுக்கு ஆதரவாக “புலுவன் ஸ்ரீலங்கா” ஒப்பந்தம் கைச்சாத்து

ரணிலுக்கு ஆதரவாக “புலுவன் ஸ்ரீலங்கா” ஒப்பந்தம் கைச்சாத்து

0

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் “புலுவன் ஸ்ரீலங்கா” உடன்படிக்கையில் 34 கட்சிகளும் கூட்டணிகளும் கைச்சாத்திட்டுள்ளன.

பத்தரமுல்லையில் இன்று (16.08.2024) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளார்.

செப்டம்பர் 21, காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட 39 வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/puluwan-sri-lanka-contract-signed-favor-of-ranil-1723787922

NO COMMENTS

Exit mobile version