Home இந்தியா நடிகர் அல்லு அர்ஜுன் சற்றுமுன் கைது

நடிகர் அல்லு அர்ஜுன் சற்றுமுன் கைது

0

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை ஐதராபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புஷ்பா 2 பட வெளியீட்டின் போது பெண் ஒருவர் திரையரங்கில் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் உயிரிழந்தார்.
 

இவரது இறப்பிற்கு காரணம் அல்லு அர்ஜுன்தான் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அர்ஜுனை கைது செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

NO COMMENTS

Exit mobile version