அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு (Donald Trump) ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) பாராட்டு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினோ மச்சாடோ 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசிற்கு தெரிவாகியுள்ளார்.
இது தொடர்பில் விளாடிமிர் புடின் கருத்து தெரிவித்துள்ளார்.
சமாதானம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உலகில் சமாதானத்தை மேம்படுத்துவதற்கு பெரும் பங்களிப்பை ட்ரம்ப் செய்துள்ளார்.
ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரா என்பதை தீர்மானிப்பது அவரது தனிச்சிறப்பு அல்ல.
காசாவில் அமைதி உண்மையிலேயே ஒரு வரலாற்று சாதனை” என அவர் தெரிவித்துள்ளார்.
