Home இந்தியா சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை: மோடியை சாடிய ராகுல் காந்தி

சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை: மோடியை சாடிய ராகுல் காந்தி

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது (Narendra Modi) இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) குற்றசாட்டொன்றை முன்வைத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், தவறான முதலீட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும், மோடி மீது நாடாளுமன்ற விசாரணைகளை நடாத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக 3.4 சதவீத வளர்ச்சியை கண்டிருந்த இந்திய பங்குச்சந்தையானது (Indian Stock Market) நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத காரணத்தினால் பாரிய சரிவை கண்டது.

3 ஆவது முறையாக பிரதமராக மோடி இன்று பதவியேற்பு

பங்குச்சந்தை மாற்றம்

இதனையடுத்து, அமித் ஷா (Amit Shah) உள்ளிட்ட மோடி அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சந்தையில் பாரிய வளர்ச்சி ஏற்படும் என தெரிவித்திருந்தனர்.

எனினும், அவர்கள் எதிர்பார்த்தவாறு தேர்தல் முடிவுகளோ பங்குச்சந்தை மாற்றமோ இடம்பெறாது மாறாக பங்குச்சந்தையில் பாரிய சரிவு ஏற்பட்டிருந்தது.

மேலும், கடந்த நான்கு வருடங்களில் ஏற்பட்ட மிக மோசமான சரிவு இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா விரையும் சர்வதேச தலைவர்கள்

தவறான வழிநடத்தல்

இதனால், மோடி அரசாங்கம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை தவறான வழிநடத்தலுக்கு ஆளாக்கியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும், நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய அழுத்தத்தில் ராகுல் காந்தி, போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ராம் நாத் கோவிந்த்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. 

NO COMMENTS

Exit mobile version