Home இலங்கை அரசியல் இராணுவ முகாமை அகற்றுவதற்காக நாடாளுமன்றில் குரல் கொடுப்போம் : தமிழரசு எம்.பி சவால்

இராணுவ முகாமை அகற்றுவதற்காக நாடாளுமன்றில் குரல் கொடுப்போம் : தமிழரசு எம்.பி சவால்

0

இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் நாங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம், ஆனால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிச்சயமாக செய்ய முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
இளையதம்பி ஸ்ரீறிநாத் (Elayathambi Srinath) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) நேற்று முன்தினம் (23.02.2025)
இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர்
மேலும் தெரிவிக்கையில், “தேசிய அரசாங்கங்கள் மாறுபடும் என்பது உண்மை தற்போது ஆட்சிக்கு வந்து இருக்கும்
அரசாங்கம்கூட எதிர்காலத்தில் மாறலாம்.

தமிழரசுக் கட்சி

ஆனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியானது
எப்பொழுதும் தமிழ் மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும் என்பதில் எந்தவிதமான
மாறுபட்ட கருத்தும் இல்லை.

தேசிய மக்கள்
சக்திக்கு தமிழ் மக்கள் தொடர்பில் எந்த நல்ல அபிப்பிராயங்களும் இல்லை என்பது
உண்மை.

சாட்டுபோக்கு மாத்திரமே செய்ய முடியும்.

தேசிய மக்கள் சக்தியில் தலைமைப்
பீடத்தின் கதையை கேட்டே அவர்கள் செயற்பட வேண்டும் என்று ஓர் நிலைப்பாடு
உள்ளது. ஆனால் தமிழ் மக்களின் குரலாய், தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்
போது போராட்டங்கள் மூலமும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க எம்மாலே முடியும்.

கடந்த காலங்களில் இருந்த
அமைச்சர்களே பெரும்பாலான ஊழல்களை செய்திருந்தார்கள் தற்போது மக்கள்
அவர்களுக்கு கடந்த தேர்தலில் நல்ல பாடத்தை புகட்டியுள்ளனர்“ என தெரிவித்தார். 

NO COMMENTS

Exit mobile version