Home இலங்கை அரசியல் ரணிலிடம் போகவேண்டாமென கெஞ்சிய சஜித் : இப்படி கூறுகிறார் ராஜித

ரணிலிடம் போகவேண்டாமென கெஞ்சிய சஜித் : இப்படி கூறுகிறார் ராஜித

0

சஜித் பிரேமதாச (sajith premadasa)தனது மகன் சதுர சேனாரத்னவுக்கு(Chatura Senaratne) ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் எம்.பி. பதவியை வழங்க முன்வந்ததாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்த போது சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கெஞ்சிய சஜித்

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து இணையும் தீர்மானத்தை வாபஸ் பெறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தம்மிடம் கெஞ்சியதாகவும், நாட்டு நலனுக்காக சிந்தித்து இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு(Ranil Wickremesinghe )ஆதரவளிப்பதற்கான தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு 

நேற்றையதினம்(13) நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/rajitha-aligns-with-ranil-1723613081

NO COMMENTS

Exit mobile version