Home இலங்கை அரசியல் சஜித்துடன் இணைந்து நிம்மதியை தொலைக்க விருப்பமில்லை: ராஜித சேனாரத்ன வெளிப்படை

சஜித்துடன் இணைந்து நிம்மதியை தொலைக்க விருப்பமில்லை: ராஜித சேனாரத்ன வெளிப்படை

0

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் (Sajith Premadasa) ஒன்றிணைந்து அமைச்சர் பதவியை பெற்று நிம்மதியின்றி வாழ விருப்பமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha senaratne)தெரிவித்துள்ளார். 

பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

“உலகில் எந்த நாடும் இவ்வாறு ஒன்றரை வருடத்தில் மீண்டது கிடையாது. அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தார்.

 வழமை நிலை 

‘வங்குரோத்தடைந்த நாடென்று நினைத்து வந்தேன். ஆனால் அதிசயிக்கும் வகையில் அனைத்தும் மாறி வழமை நிலை ஏற்பட்டுள்ளது’ என அவர் கூறினார்.

ஆனால், எதிரணியினர் ரணிலை பகிரங்கமாக விமர்சிக்கின்றனர். நான் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி சஜித்துடன் சேர்ந்து அமைச்சரவை பதவி பெற்று நிம்மதியாக இருந்திருக்கலாம்.

இருப்பினும், நாட்டை மீட்கவே அனைத்தையும் விட்டு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக வெளியில் வந்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version