Home இலங்கை அரசியல் ஓரங்கப்பட்ட தரப்புடன் கூட்டு சேரும் சாக்கடை அரசியல்: அமைச்சர் காட்டம்

ஓரங்கப்பட்ட தரப்புடன் கூட்டு சேரும் சாக்கடை அரசியல்: அமைச்சர் காட்டம்

0

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை
அரசியலாகும் என கடற்றொழில் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ். சாவக்கச்சேரியில் இன்று(14.06.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்
இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாம் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் இங்குள்ள தமிழ்க் கட்சிகளின் கனவு
சிதைக்கப்படும். மனக்கோட்டை, மண்கோட்டையாக மாறிவிடும் என்பதை சொல்லி வைக்க
விரும்புகின்றோம்.

ஊழல், மோசடிகள்

இங்கு யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சிக்கு நாம் உதவியாக இருப்போம். ஏனெனில்
மக்களுக்கு சேவை செய்வதே எமது முதன்மை நோக்கமாகும்.

உள்ளுராட்சி சபைகள் ஊடாக
மக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் சரியாக சென்றடைய வேண்டும். அதற்காக எமது
உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படுவார்கள்.

அதேபோல ஊழல், மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கும்
எமது உறுப்பினர்கள் முன் நிற்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version