ஈரானுடனான மோதல்கள் நடந்து வருவதால்,நாளை மறுதினம்(16) திங்கட்கிழமை நடைபெறவிருந்த அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமரின் மகனின் திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து கோபத்தை ஏற்படுத்தியது.
கடும் எதிர்ப்புகள்
இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னும் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளபோது நெதன்யாகு குடும்பத்தினர் கொண்டாட்டத்தை நடத்துவதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலேயே இந்த திருமணம் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
