Home இலங்கை அரசியல் தேரர்களிடம் மன்னிப்பு கோரிய அர்ச்சுனா

தேரர்களிடம் மன்னிப்பு கோரிய அர்ச்சுனா

0

 கண்டி மாநாயக்க தேரர்களிடம் அர்ச்சுனா ராமநாதன் எம்.பி நாடாளுமன்றில் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று (24.12.2025) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா இராமநாதன் எம்.பி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் வெளியில் வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

மன்னிப்பு கோரியதற்கான காரணம்

சமகால அநுர அரசாங்கம் இன்னும் சிறுது காலம்தான் ஆட்சியில் இருக்கும் என தலதா மாளிகையின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்ததாக கடந்த 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நான் தெரிவித்திருந்தேன்.

ஆனால் அவர்கள் அப்படி சொல்லவில்லை.இந்த அரசாங்கத்தை தொடர்ச்சியாக கொண்டு செல்ல எனது பங்களிப்பை வழங்குமாறும், உங்களை போன்று உண்மையை பேசுபவர்களே எமது நாட்டுக்கு தேவை என குறிப்பிட்டனர்.

ஆனால் மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுக்கின்றனர் என்ற கருத்தில் அவர்களையும் சேர்த்ததற்கு மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.அவர்கள் சொல்லாததை நாடாளுமன்றத்தில் கூறியதாக அர்த்தமாகிவிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.

   

NO COMMENTS

Exit mobile version