Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்பியால் அமளி துமளி

நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்பியால் அமளி துமளி

0

வைத்தியர் சத்தியமூர்த்தியை யாழ். போதனா வைத்தியசாலை பொறுப்புகளில் இருந்து அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா(Ramanathan Archchuna) கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(18) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யாழ் போதனா வைத்தியசாலையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் எந்தவித ஒப்பந்தங்களும் இன்றி 170 இளைஞர் யுவதிகள் சேவையாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் சம்பளம் ஒதுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் குறித்த தொகை 5 மாதங்களே வழங்கப்பட்டிருந்தது. இது ஒரு மிலேச்சத்தனமான குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாட்களுக்கு சுகாதார அமைச்சர் வாய்மொழி மூலம் வாக்குறுதிகளை வழங்கி இருந்துள்ளார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாட்கள் வைத்தியசாலைக்கு சென்ற போது வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியால் மிலேச்சத்தனமாக மிரட்டப்பட்ட காவலாளிகளால் வெளியேற்றப்பட்டனர் என அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர்கள் தன்னுடன் தொடர்பு கொண்டு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கமைய, தான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் வைத்தியசாலைக்கு சென்ற போது வைத்தியர் சத்தியமூர்த்தி தன்னை தரம் குறைவான ஆளாக நடத்தி அவரின் அறிவுறுத்தலின் படி காவலாளி மற்றும் காவல்துறை மூலமாக வெளியேற்றினார் என அர்ச்சுனா கூறியுள்ளார்.

அது தவிற தனக்கு எதிராக வழக்கும் பதியப்பட்டுள்ளதாகவும் இதுவரை 19 வழக்குகள்  உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அர்ச்சுனா எம்.பி  கூறியவற்றை கீழ்வரும் காணொளியில் காணலாம், 

https://www.youtube.com/embed/iooH3HX_ZFo

NO COMMENTS

Exit mobile version