Home இலங்கை அரசியல் அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை – பறந்த உத்தரவு

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை – பறந்த உத்தரவு

0

யாழ்.போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே எம்.பி அர்ச்சுனா உள்ளே அனுமதிக்கப்படுவார் எனவும்,
வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் உள்நுழைய முடியாது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு (Ramanathan Archchuna) அறிவித்தல் விடுத்துள்ளது.

அர்ச்சுனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 16ஆம் திகதி யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வழக்கு அடுத்த வருடம்(2025) பெப்ரவரி 7ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகள்,

https://www.youtube.com/embed/STTtJs0kmE0

NO COMMENTS

Exit mobile version