Home முக்கியச் செய்திகள் கோட்டை நீதவான் நீதிமன்றில் திரளும் ரணிலின் ஆதரவாளர்கள்!

கோட்டை நீதவான் நீதிமன்றில் திரளும் ரணிலின் ஆதரவாளர்கள்!

0

புதிய இணைப்பு

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படடுள்ள நிலையில், முன்னாள் அரசியல்வாதிகள் பலரும் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதன்காரணமாக கோட்டை நீதிவான் நீதிமன்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

அதன்காரணமாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணை ஒன்றுக்கான வாக்குமூலங்களை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கைது நடவடிக்கை

தொடர்ந்து சுமார் நான்கரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.

தனது பதவிக் காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றது குறித்த நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version