கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக அதிகளவான ரணில் விக்ரமசிங்க ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று பிற்பகல் முன்னாள் ஜனாபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில், நீதிமன்றத்திற்கு முன்னால் திரண்டிருந்த ரணில் ஆதவாளர்கள், “உங்களோடு நாங்கள் எப்போதும் இருக்கின்றோம்” என்று அழுது கூச்சலிட்டுள்ளனர்.
அத்துடன், ரணிலுக்கு ஆதரவாக பெருமளவான அரசியல்வாதிகளும் நீதிமன்றத்தின் முன்னால் ஒன்று திரண்டுள்ளனர்.
