Home இலங்கை அரசியல் சிஐடியில் வெளியேறினார் ரணில்

சிஐடியில் வெளியேறினார் ரணில்

0

புதிய இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

சுமார் ஒரு மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil wickremesinghe) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று(11)முன்னிலையாகியுள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளதுடன், அதற்கமைய முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புக்கு அமைவாக ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version