Home இலங்கை அரசியல் ரணில் ஆட்சியின் அமைச்சரவை தீர்மானம்: அநுர அரசுக்கு விசேட அறிவிப்பு

ரணில் ஆட்சியின் அமைச்சரவை தீர்மானம்: அநுர அரசுக்கு விசேட அறிவிப்பு

0

Courtesy: Sivaa Mayuri

அரச பணியாளர்களின்; சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த, அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க திட்டமிட்டிருந்ததாகவும், நடப்பு அரசாங்கம், சம்பள அதிகரிப்பை வழங்கப்படாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்குள்ளது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச பணியாளர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க

அனைத்து அரச பணியாளர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து சம்பள அதிகரிப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என கூறியுள்ளார்.

தமது செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்க, பொருளாதார ஆலோசகர் சமரதுங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோருடனும் கலந்துரையாடியே, இறுதியில் இந்த சம்பள உயர்வை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி அரச பணியாளர்களின்; சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவை ஆவணத்தில் ஜனாதிபதி என்ற முறையில் தாம் கையெழுத்திட்டுள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அமைச்சர் விஜித ஹேரத் இதற்கு முன்னர் அமைச்சரவையில் இருந்ததாக நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் எடுத்த தீர்மானம் முற்றிலும் சட்டபூர்வமானது என்றும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version