எதிர்வரும் இலங்கை(Srilanka) தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“தேர்தலை மிகக் குறுகிய காலத்திற்குள் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளது.
ரணில் விக்ரமசிங்க
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளால் ரணில் விக்ரமசிங்கவின் வேட்புமனுவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
எனவே, எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார்”என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் அதிபர் தேர்தல் நடாத்தப்பட உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.