Home இலங்கை அரசியல் நாட்டை கைவிட்டுவிட்டு ஓடிய சஜித்: மறுக்கும் ஹர்ஷ டி சில்வா

நாட்டை கைவிட்டுவிட்டு ஓடிய சஜித்: மறுக்கும் ஹர்ஷ டி சில்வா

0

நாடு நெருக்கடிக்கு உள்ளான போது சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பொறுப்பேற்காமல் ஓடிவிட்டார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி தானும் இரான் விக்ரமரத்ன, கபீர் ரஷீம் மற்றும் ரஞ்சித் மத்தும் பண்டாரவும் அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அதிகார பரிமாற்றம் தொடர்பில் கலந்துரையாடியதாக ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

பிரதமர் பதவி

தேவைப்பட்டால் இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் (Gotabaya Rajapaksa) கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலின் போதே, தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பின் வாசல் வழியாக வந்து பிரதமர் பதவியை கைப்பற்றியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version