Home இலங்கை அரசியல் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமையை ரணிலால் தடுக்க முடியவில்லை : சஜித் விசனம்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமையை ரணிலால் தடுக்க முடியவில்லை : சஜித் விசனம்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமையை தடுக்க முடியாமல் போயுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். 

கேகாலையில் (Kegalle) நேற்று (17) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”தற்போது வரி மீது வரி விதித்துச் சிறு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த அசாதாரண வரி சூத்திரம் மாற்றியமைக்கப்பட்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

வினாத்தாள் கசிவு 

இயலும் எனக் கூறுகின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (Grade 5 scholarship exam) வினாத்தாள் கசிந்தமையை தடுக்க முடியாமல் போயுள்ளது.

குறித்த வினாத்தாளில் 3 வினாக்களை நீக்குவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எதிர்வரும் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று லயன் என்ற நெடுங்குடியிருப்பில் வாழும் பெருந்தோட்ட மக்களையும் அங்கு தொழில் வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் ஏற்றுமதி விவசாயமும் பலப்படுத்தப்படும்“ என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version