ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) எரிவாயு சிலிண்டரை தேர்தல் சின்னமாக தெரிவு செய்வதற்கான பின்னணி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
எரிவாயு சிலிண்டரை பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரித்தானியாவில் (united kingdom) இருந்தே ஆலோசனை கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானிய நிபுணரின் ஆலோசனைக்கு அமைய ரணில் விக்ரமசிங்கவின் வாக்குச் சின்னமாக எரிவாயு சிலிண்டர் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு ஆலோசனை
பிரித்தானிய நிபுணர் டேவிட் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு நேரடியாக தொடர்புபட்டுள்ளதாகவும் அவரே ஜனாதிபதிக்கு ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட எரிவாயு வரிசை மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டதை நினைவுப்படுத்தும் வகையிலேயே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதயம் சின்னத்தை கேட்ட ரணில் இறுதியில் சிலிண்டர் சின்னத்தை எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில் பல தரப்பினராலும் பேசப்பட்ட விடயமாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.