அரகலய போராட்டத்தை நிர்மாணித்தவர்களில் ஜனாதிபதி ரணிலும்(ranil) ஒருவர் என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) குற்றம் சாட்டியுள்ளார்.
சிஸ்டம் சேஞ்ச் என்ற முறைமை மாற்றத்தைக் கோரி போராடிய இளைஞர்கள் இன்னும் வீதிகளிலேயே இருக்கிறார்கள்.
அரகலயவில் ஈடுபட்ட ஒரு பிரிவினர் ரணிலுடன் தொடர்பு
அரகலயவில் ஈடுபட்ட ஒரு பிரிவினர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்புபட்டிருக்கிறார்கள்.
அவரது செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அவரும் அரகலய போராட்டத்தின் சூத்திரதாரிகளில் ஒருவர் எனவே நிரூபணமாகிறது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கொழும்பில் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது.இந்தப்போராட்டத்தால் கோட்டாபய நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டதுடன் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதும் குறிப்பிடத்தக்கது.