Home இலங்கை அரசியல் கோட்டாபயவை முந்திய ரணில்: எதில் தெரியுமா..!

கோட்டாபயவை முந்திய ரணில்: எதில் தெரியுமா..!

0

அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடந்த வரவு செலவுத் திட்டத்தில் இந்த வருடத்திற்கு (2024) ஒதுக்கப்பட்ட பணத்திற்கு மேலதிகமாக மேலும் 8,750 மில்லியன் ரூபாவை (ரூ. 875 கோடி) ஒதுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) முன்வைத்த யோசனைக்கு சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்வினைகள் தெரிவிக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான அதிபரின் வரவு செலவுத் திட்டமாக ஆரம்பத்தில் 6,607 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அத்தொகைக்கு மேலதிகமாக 8,750 மில்லியன் ரூபாவை இன்னும் பெரிய தொகையாக வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தல் நடப்பது உறுதி: எதிர்க்கட்சி எம்பி திட்டவட்டம்

பதவி நீக்கம் செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச

2022இல் பதவி நீக்கம் செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) மற்றும் மொட்டு தலைமையிலான 134 நாடாளுமன்ற உறுப்பினர்களால் நியமிக்கப்பட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe) இருவரும் 2022 இல் 2,732 மில்லியன் ரூபாவையே செலவிட்டுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இது இரண்டு மடங்காக அதிகரித்து 5,631 மில்லியன் ரூபாவாக உயர்ந்தது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட போது, ​​6,607 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், தற்போது அதனை 15,360 மில்லியன் ரூபாவாக (15.63 பில்லியன் ரூபா வரை) அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முடிவை அறிவித்த மகிந்த

ஆறு மடங்கு அதிகரித்த ரணிலின் செலவு

கோட்டாபய ராஜபக்சவின் செலவுகளுடன் ஒப்பிடுகையில், ரணில் விக்ரமசிங்கவின் செலவினங்கள் ஆறு (6) மடங்கு அதிகரித்துள்ளது.

இவ்வாறு, ரணில் விக்ரமசிங்க என்ற தனியொருவரை அதிபராக நியமித்ததன் விளைவாக, அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு செலவிடப்பட்ட தொகையை விட 562% அதிகமான சுமையை மக்கள் சுமக்க வேண்டியுள்ளது என அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version