Home இந்தியா மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா விரையும் சர்வதேச தலைவர்கள்

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா விரையும் சர்வதேச தலைவர்கள்

0

இந்திய தேர்தல் முடிவுகளுகமைய மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி(Narendra Modi) பதவியேற்கவுள்ளார்.

இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவானது , நாளை (9) இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலக தலைவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது.

பாஜக வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கை: இளைஞனின் விபரீத செயல்

 பதவியேற்பு விழா

இதன்படி பதவியேற்பு விழாவில்,
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே(Ranil Wickremesinghe), மாலைதீவு அதிபர் முகமது முயிசு(Mohammed Muisu), சீஷெல்ஸ் துணை அதிபர் அஹமது அபிப்(Ahmed Abib), வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா(Sheikh Hasina), மொரிஷீயஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத்(Pravin Kumar Jagannath) , நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா(Pushpa Kamal Dahal Prasanda
Nepal Prime Minister Pushpa Kamal Dahal Prasanda), பூட்டான் பிரதமர் ஷெரீங் டோப்கே, ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், உலகத்தலைவர்கள் வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் முக்கிய ஹோட்டல்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் நேருக்கு பிறகு, தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.

இதேவேளை, இந்திய கூட்டணிக்கு பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்க தமிழக பெண்ணுக்கு வாய்ப்பு

இழுபறி நிலையில் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version