முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோல்வியுற்ற ஒரு அரசியல் தலைவர் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விமர்சித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு ரணில் வி்க்ரமிசிங்க விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் கருத்து வௌியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள சாகர காரியவசம், கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை அழித்தார். தனது சொந்தக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும் அடியோடு அழித்துவிட்டார்.
பொதுஜன பெரமுனவின் மிகப்பெரும் பிழை
அவரது நீண்டநாள் கனவான ஜனாதிபதிப் பதவியை அடைந்து கொள்வதற்கு பொதுஜன பெரமுண கட்சி ஆதரவளித்தது. கடைசியில் எங்கள் கட்சியையும் அவர் அழித்துவிட்டார்.
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க ஆதரவளித்தது உண்மையில் எங்கள் கட்சி மேற்கொண்ட மிகப்பெரும் பிழையாகும். அதனால் தான் கடந்த தேர்தலில் நாங்கள் தோல்வியுற்றோம்.
அதே நேரம் ரணில் விக்ரமசிங்க வரலாற்றில் என்றைக்கும் தேர்தல்களில் வெற்றிபெற்றதேயில்லை. என்றைக்கும் அவர் தோல்வியுற்ற ஒரு அரசியல்வாதியே என்றும் சாகர காரியவசம் தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.