Home இலங்கை அரசியல் உலகின் பலம்பொருந்திய நாடாக இலங்கையை மாற்றக் கூடிய தலைவர் ரணில் மட்டுமே: வஜிர சுட்டிக்காட்டு

உலகின் பலம்பொருந்திய நாடாக இலங்கையை மாற்றக் கூடிய தலைவர் ரணில் மட்டுமே: வஜிர சுட்டிக்காட்டு

0

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் நீடித்தால் இலங்கை உலகின் பலம்பொருந்திய நாடாக மாறும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2048ம் ஆண்டில் இலங்கையை உலகின் பலம்பொருந்திய நாடாக மாற்றக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவார்.

தலைமைப் பொறுப்பு

1994ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ரணில் ஏற்றுக் கொண்டது முதல் உண்மைகளை உரைத்து வருகின்றார். 

மக்கள் அதனை நிராகரித்தாலும் இறுதியில் மக்களே உண்மைகளை புரிந்துக்கொண்டுள்ளனர்” என்றார்.

Source: https://tamilwin.com/article/ranil-is-the-only-leader-to-make-lanka-prosper-1718877512

NO COMMENTS

Exit mobile version