Home இலங்கை அரசியல் சம்பள அதிகரிப்பு, விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமா..! ரணிலை விளாசும் அனுர குமார

சம்பள அதிகரிப்பு, விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமா..! ரணிலை விளாசும் அனுர குமார

0

தனது தோல்வியை உணர்ந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe), அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல் போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற உறுதிமொழிகளை வழங்க ஆரம்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்துள்ளார்.

எல்பிட்டியவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் ரணில் உண்மையான அக்கறை கொண்டிருந்தால், தற்போது வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்க முடியும்.

தோல்வி பயத்தால் வழங்கப்படும் வாக்குறுதிகள்

ஆட்சியை இழக்கப் போவதை உணர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை அவர் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“சில மாதங்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டபோது, ​​பணப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மறுத்துவிட்டார்.இப்போது எப்படி சம்பளத்தை உயர்த்துவார்.

விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமா

அவர் விவசாயகடனையெல்லாம் தள்ளுபடி செய்வேன் என்றும் கூறியது பொய்.அது சாத்தியம்தான். ஆனால், முதலில் ஒரு முறையான பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும், அவர் இப்போது தோல்வி பயத்தால் நடைமுறைக்கு சாத்தியமில்லாத மற்றும் குழப்பமான வாக்குறுதிகளை வழங்குகிறார்.

ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோன்ற வாக்குறுதிகளை மக்கள் கேட்டு வருவதால் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.

NO COMMENTS

Exit mobile version