Home இலங்கை அரசியல் ரணில் தரப்பின் ஊடக சந்திப்பு! குழப்பம் விளைவிக்க முயற்சி

ரணில் தரப்பின் ஊடக சந்திப்பு! குழப்பம் விளைவிக்க முயற்சி

0

ரணில் விக்ரமசிங்க தரப்பின் ஊடக சந்திப்பில் குழப்பம் ஏற்படுத்துவதற்கான திரைமறைவு சதியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் ஊடக சந்திப்பொன்று இன்று நடைபெற்று வருகின்றது.

குழப்பம் விளைவிக்க முயற்சி

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் காலை ஒன்பது மணியளவில் நடைபெறவுள்ள குறித்த ஊடக சந்திப்பை குழப்பியடிக்கும் சதித்திட்டமொன்றை ஒரு தரப்பினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தனியார் ஊடக வலையமைப்பு ஒன்றின் செய்தியாளர் மூலம் அல்லது பதிவு செய்யப்பட்ட இணையத்தள செய்தியாளர் ஒருவர் மூலம் தேவையற்ற கேள்விகள் மற்றும் ஆத்திரமூட்டும் கேள்விகள் அல்லது செயற்பாடுகள் மூலம் குறித்த ஊடக சந்திப்பில் குழப்பம் விளைவிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version