Home இலங்கை அரசியல் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு :அரசுக்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு :அரசுக்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்

0

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையை எதிர்கொள்ள தேவைப்பட்டால், தற்போதைய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்

நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பொதுச் செயலாளர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச தொடர்பு

ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச தொடர்புகளும் ஐந்து தசாப்த கால அரசியல் அனுபவமும் அனர்த்த மேலாண்மைக்கு அவசியம் என்று பொதுச் செயலாளர் வலியுறுத்தினார்.

மேலும் அரசாங்கம் கோரினால் மட்டுமே இந்த உதவி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

எந்த அரசாங்கப் பதவியையும் ஏற்கப் போவதில்லை

தனது தலைவரிடமிருந்து பெற்ற போதனைகளின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு உதவத் தயாராக இருந்தாலும், அதற்காக எந்த அரசாங்கப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version